October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சுள்ளங்குடி கிராமத்தில் மண் வள அட்டை திட்ட பயிற்சி

சிவகங்கை, அக்.9

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண் வள அட்டை திட்டம் பற்றிய இரண்டு நாள் பயிற்சியாக 07.10.2021 மற்றும் 08.10.2021 அன்று சுள்ளங்குடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் தலைமையேற்று தொடங்கி வைத்த மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, கூறுகையில் மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்து மண்ணிற்கு தேவையான உரங்களை இடுவதால் மண் வளத்தை பாதுகாக்கலாம் எனவும் மண் ஆய்வு செய்வதின் நோக்கம் பயிர்கேற்ற உரத்தை போட்டு மண் வளத்தை பாதுகாக்கவும், ஒரு பயிர் அறுவடைக்கு பின்பு அந்த மண்ணிலுள்ள சத்து குறைவாக இருக்கும் அந்த நேரத்தில் மண் ஆய்வு செய்து அங்கக உரங்கள் மற்றும் இரசாயன உரங்கள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து உரமிட வேண்டும் மற்றும் மழையினால் மண் அரிமானம் ஏற்பட்டு மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்துவிடும் எனவே மண் ஆய்வு மிகவும் அவசியம் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

சிவகங்கை மண் ஆய்வகம் மூத்த வேளாண்மை அலுவலர் முத்துமீனா, மண் மாதிரி எடுப்பது பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். ஒவ்வொரு பயிருக்கு ஏற்றது போல மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 இடத்தில் v வடிவத்தில் நடந்து மண் மாதிரி சேகரிக்க வேண்டும். ஒரு இடத்தில் மண் வெட்டி வைத்து 15 செ.மீட்டருக்கு ஏ வடிவத்தில் வெட்டி நடுவிலுள்ள மண்ணை இந்த மாதரி 8 இடத்தில் எடுத்து 500 கிராம் என்ற அளவில் பாலித்தீன் பைகளில் விவசாயிகளின் பெயர், முகவரி, சர்வே எண், தொலைபேசி எண், முந்தைய பயிரின் விபரங்களை எழுதி கொடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மானாமதுரை வட்டார வேளாண்மை அலுவலர் த.கிருத்திகா, திரவ உயிர் உரம் பயன்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் பயன்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் ம.தினேஷ், விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பது பற்றிய செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.

Spread the love