January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சூப்பர் ப்ளூ தோற்றத்தில் 2022 யமஹா ஆர்7 பைக்

யமஹா நிறுவனம் தனது புதிய மிடில்வெயிட் 2022 ஆர்7 சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளின் அம்சங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

யமஹா ஆர்6 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக 2022 யமஹா ஆர்7 பைக்கை தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பைக்கின் விவரங்களை படங்களுடன் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தோற்றத்தைப் பொருத்தவரை ஆர்6 பைக்கிற்கும் ஆர்7 பைக்கிற்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. இருப்பினும் இரண்டு மாடல்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் சிறிய சிறிய மாற்றங்களை மட்டும் யமஹா நிறுவனம் செய்துள்ளது.

பைக்கின் முன் பக்கத்தில் மட்டுமே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆர்6 பைக்கில் ஹெட்லேம்ப் இரட்டைப் பிணைப்பாகக் கொடுக்கப்பட்ட நிலையில், புதிய ஆர்7 பைக்கில் ஒரே விளக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹெட்லைட்டிற்கு இரு பக்கத்திலும் எல்இடி டிஆர்எல்கள் காணப்படுகின்றன. அதேபோல் இந்த எல்இடி ஹெட்லைட் முன்பக்க காற்று ஏற்பானுக்கு பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒளிரும்போது இரட்டை-பீம் கிடைக்கிறது.

முன்பக்க எதிர்க் காற்று தடுப்பு கண்ணாடி முன்பைக் காட்டிலும் சற்று பெரிதாக உள்ளது. அத்துடன் பைக்கின் பக்கவாட்டு பகுதியும் பெரிய ஸ்கூப்களுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்ஜினில் இருந்து வெளிவரும் சூடான காற்று ஓட்டுனரின் கால்களின் மீது படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் டேங்க் பகுதியில் ஏரோ டைனமிக் அம்சங்களுக்காக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்7 பைக்கின் பின்பக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பின்பக்கத்தில் வழக்கம்போல் கூர்மையான டெயில்லைட் உள்ளது.

ராவென் பிளாக் மற்றும் டீம் யமஹா ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் இந்தப் பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் யமஹா நீல நிறத்தேர்வில் மட்டும் அலாய் சக்கர ரிம்களில் கூடுதல் ஸ்போர்டி டச்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

க்ளிப்-ஆன் ஹேண்டில்பார், பிளவுபட்ட இருக்கை அமைப்பு மற்றும் சிறிய அளவிலான எக்ஸாஸ்ட் குழாய் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தப் பைக்கில் 689சிசி லிக்விட் கூல்டு இரட்டை என்ஜின் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 72.4 பிஎச்பி பவர் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு அம்சமாக டூயல்-சேனல் ஏபிஎஸ் தரப்பட்டுள்ளது.

இந்தப் பைக்கின் வீல்பேஸ் 1.395 மிமீ என்றும், மினிமம் கிரவுண்ட் கிளியரன்ஸ் 135 மிமீ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love