May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சூரிய சக்தியின் பயன்பாடு
விவசாயிகள் கண்டுணர்வு பயணம்

புதுக்கோட்டை, மார்ச் 14

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2021-2022) சூரிய சக்தியின் பயன்பாடு என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான கண்டுணர்வு பயணமாக குடுமியான்மலையிலுள்ள அண்ணாபண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லபப்ட்டனர்.

இந்த கண்டுணர்வு பயணத்தில் திட்ட இயக்குநர்/வேளாண்மை இணை இயக்குநருமான இரா.சிவக்குமார் கலந்து கொண்டு சூரிய சக்தியின் பயன்பாடுகள் குறித்தும், சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய நீர் பாசனம் முறைகள், சூரிய கூடார உலர்த்தி ஆகியன பற்றியும், நுண்ணீர் பாசன முறைகளான சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவான் அமைப்பதற்கான மானிய விபரங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பெரியசாமி, அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். அண்ணாபண்ணையின் வேளாண்மை அலுவலர் சதிஷ், அண்ணா பண்ணையில் தற்போது சாகுபடி செய்துள்ள பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் அண்ணா பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும், நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களான நாற்று தயார் செய்தல், நடவு இடைவெளி, ஊடுபயிர் சாகுபடி, களை எடுத்தல், மண் அணைத்தல், சோகை உரித்தல், உர மேலாண்மை, சாதாரண முறைக்கும், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஆகியன பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

அண்ணா பண்ணையின் உதவி வேளாண்மை அலுவலர் ராம்குமார், நிலக்கடலையில் விதைப் பண்ணை அமைப்பது, விதைகளை தேர்வு செய்வது, விதை நேர்த்தி செய்து விதைப்பது, பயிர் இடைவெளி, ஜிப்சம் இட்டு மண் அணைத்தல், உர நிர்வாகம், ஊடுபயிர் சாகுபடி, விளக்குப்பொறியின் பயன்பாடு ஆகியன குறித்து விளக்கமளித்ததார்.

விவசாயிகள் அனைவரும் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய நீர் பாசனம் முறைகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்துள்ள திடல், விதைப்பண்ணை திடல் ஆகியவற்றை பார்வையிட்டு சந்தேகம் கேட்டறிந்தனர்.

Spread the love