January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சென்ஃபோன் 8, சென்ஃபோன் 8 ப்ளிப் அசுஸ் அறிமுகப்படுத்தியது

சென்ஃபோன் 8 மற்றும் சென்ஃபோன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அசுஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் சென்ஃபோன் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

சென்ஃபோன் 8 மொபைலப் பொருத்தவரை 5.9-இன்ச் எப்எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2400 x 1080 பிக்சல் துல்லியம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கொரில்லா கிளாஸ் Victus பாதுகாப்பு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் புராஸசர் மற்றும் அட்ரினோ 660 ஜிபியு வசதியுடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ZenUI 8 இயங்குதளத்தில் செயல்படும்.

இதில் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உள்ளது.

பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என டூயல் கேமரா மற்றும் 12எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.

4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியானது 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் 8 ஆனது அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் பேஸ் வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.44,095-ஆக உள்ளது. பின்பு இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.71,040 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love