தேனி, ஜூன் 7
உலகளவில் ஆண்டுதோறும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக 2018ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. உணவுப்பழக்கங்கள், உணவை பாதுகாக்கும் வழிமுறைகள், சத்துக்குறையாமல் சமைக்கும் வழிமுறைகள் நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சியடைதல் போன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இக்கருத்தைக் கொண்டு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைத்தின் மூலம் உலக உணவு பாதுகாப்பு தினம் சின்னமனூர் வட்டராம் எஸ்.அழகாபுரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சின்னமனூர் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ்.சுரேஸ் கண்ணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு பாதுகாப்புச் சட்டங்கள், உணவை பாதுகாக்கும் வழிமுறைகள், உணவுச் சத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் சமைக்கும் முறைகள், சமைத்தலின் போது உணவை பாதுகாக்கும் உபகரணங்களை கையாள்வது, கையுறை, தலையுறை, முகக்கவசம் மற்றும் ஏப்ரன்கள் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கமளித்தார்.