June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சென்னையில் வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை, ஏப்.26

கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

அதற்கான புதிய கால அட்டவணையும் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டது. அந்தவகையில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலை நாட்களில் 459 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரத்தில் மேலும் குறைவான ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது திங்கள் முதல் வேலை நாட்களில் கூடுதல் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதன் அடிப்படையில், ஆவடி-திருவள்ளூர், ஆவடி-அரக்கோணம், மூர்மார்க்கெட்-ஆவடி, கடற்கரை-திருவள்ளூர், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-திருவள்ளூர், அரக்கோணம்-கடற்கரை, திருவள்ளூர்-மூர்மார்க்கெட், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே தலா ஒரு மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது.

இதேபோல், கடற்கரை-ஆவடி இடையே 5 மின்சார ரயில் சேவையும், ஆவடி-கடற்கரை இடையே 3 மின்சார ரயில் சேவையும், திருவள்ளூர்-கடற்கரை, திருவள்ளூர்-ஆவடி இடையே தலா 2 மின்சார ரெயில் சேவையும் என யமாத்தம் கூடுதலாக 21 மின்சார ரயில் சேவைகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படுகிறது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love