சென்னை, மே 6
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் காரணமாக கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால், மக்கள் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தனர். இந்நிலையில் சென்னை வாசிகளை மகிழ்விக்கும் விதமாக வியாழக்கிழமை காலை திடீர் மழை கொட்டியது.
குறிப்பாக, சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர், அசோக் நகர், அடையாறு, கிண்டி, கத்திப்பாரா உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலையில் லேசான மழை கொட்டியது. உஷ்ணத்தில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் அளித்தது.
Spread the love