May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் மார்ச் காலாண்டில் ரூ.333 கோடி லாபம் ஈட்டியது

புது தில்லி, மே 3

ஐஓசி குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் (சிபிசிஎல்) கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் தனிப்பட்ட நிகரலாபமாக ரூ.332.95 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிசிஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.14,734.43 கோடியாக இருந்தது.

இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.11,795.66 கோடியாக காணப்பட்டது.

மேலும், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.2,388.06 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் தனிப்பட்ட நிகரலாபமாக ரூ.332.95 கோடியை ஈட்டியுள்ளது.

2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய தனிப்பட்ட வருமானம் ரூ.48,730.45 கோடியிலிருந்து ரூ.42,006.95 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.2,077.58 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில் 2020-21ல் தனிப்பட்ட நிகரலாபமாக ரூ.237.56 கோடியை பெற்றுள்ளதாக சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love