October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 54.35 சதம் சரிவு

புது தில்லி, அக்.13

கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 5 மாதங்களில் இல்லாத வகையில் 54.35 சதம் என்ற அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.30 சதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 4.35 சதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 7.27 சதமாவும் மிகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம், உணவு பொருட்கள் விலை குறைந்ததே ஆகும். உணவு பொருட்கள் பிரிவில் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 3.11 சதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 0.68 சதமாக சரிந்துள்ளது. ஆர்பிஐ, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.

நடப்பு நிதியாண்டில், ஆர்பிஐக்கு சில்லரை பணவீக்க இலக்கு 4 சதமாக இருக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிபடத்தக்கது. இதில் 2 சதம் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

இந்த வகையில் செப்டம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ஆர்பிஐக்கான இலக்குக்குள் இருக்கிறது. நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதமாக இருக்கும் என ஆர்பிஐ அண்மையில் நடந்த அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில் தெரிவித்திருந்தது.

Spread the love