September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

செப்.14ல் சன்செரா இன்ஜினியரிங் ஐபிஓ வெளியீடு பங்கு விலை ரூ.734-744 ஆக நிர்ணயம்

புது தில்லி, செப்.9

பெங்களுருவைச் சேர்ந்த, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான சன்செரா இன்ஜினியரிங் நிறுவனம் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 14ம் தேதி துவங்கி, 16ல் முடிவடைகிறது. மேலும், பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 734 ரூபாய்; அதிகப்பட்ச விலை, 744 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டில் நிறுவனர்களின், 1.72 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக, அதிகப்பட்சமாக, ரூ.1,283 கோடி திரட்ட சன்செரா இன்ஜினியரிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்ட உள்ள நிதியில் பழைய கடனை திரும்பத் தரவும், நடைமுறை செலவினங்கள் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கும் பயன்படுத்த, சன்செரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Spread the love