October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சேடபட்டியில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

மதுரை, அக்.12

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார்.

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் மரம் நடும் பணியை உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் பார்வையிட்டார். அதன் பின் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காசோளத்திற்கு மருந்தடிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Spread the love