January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சேந்தமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

நாமக்கல், டிச.25

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின்கீழ் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி ரெட்டிப்பட்டி பொம்மசமுத்திரம் பெருமாப்பட்டி கொடிகால்புதூர் புதுக்கோட்டை திப்ரமாதேவி எம்.மேட்டுப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழக முதல்வர் பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணம் கொரோனா நிவாரண உதவித்தொகை நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார். சுகாதாரத்துறையின் மூலம் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவிலிருந்து பொதுமக்களை பாதுகாத்துள்ளார். மேலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து விரைந்து தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். பின்னர் சேந்தமங்கலம் ஊராட்சி; ஒன்றியம் ரெட்டிப்பட்டி ஊராட்சியில் மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பித்தல் பணிக்கு பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

Spread the love