நாமக்கல், மார்ச் 29
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள முத்துக்காப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயான்பட்டையில் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறை செயல்விளக்கம் நடைபெற்றது.
நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவம் பயிற்சி பெற்று வருகின்றனர். இம் மாணவிகள் காளப்பநாயக்கன்பட்டி அருகில் முத்துக்காப்பட்டி கிராமத்தில், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இனக்கவர்ச்சி பொறி (Pheromone trap) குறித்து அப்பகுதி விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.
இந்த செயல் விளக்கத்தில் முத்துக்காப்பட்டி கிராம விவசாயிகள் கலந்து கொண்டு இனக்கவர்ச்சி பொறி, பயன்படுத்துவது குறித்து அறிந்து கொண்டதோடு, தங்கள் சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொண்டனர். இது போன்று தங்கள் பகுதியில் பயன்படுத்தி, இயற்கை வேளாண்மைக்கு ஊக்கமளிப்பதோடு, சாகுபடி செலவையும் குறைக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
Spread the love