சேலம், ஏப்.24
இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணி
அளவில் மாநகரில் அஸ்தம்பட்டி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அழகாபுரம், கிச்சிப்பாளையம், 4 ரோடு என பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இம்மழை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இந்த திடீர் மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து
ஓடியது. மேலும் பல இடங்களில் மழைநீர் சாக்கடை கால்வாய் நீருடன் கலந்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்தனர்.