January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சேலத்தில் பூக்கள் செடியிலேயே கருகும் அவலம்

சேலம், மே 13

சேலம் மாவட்டத்தில், ரூ.50 கோடி மதிப்புள்ள பூக்கள், செடிகளிலேயே கருகுவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, ஓமலூர் உட்பட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள், சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதோடு, தென் மாவட்டங்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.

கரோனாவால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டதோடு, கோவில்கள் மூடப்பட்டு, திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பூக்களின் பயன்பாடு குறைந்து, விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அரளி, காக்கட்டான், நந்தியாவட்டம் ஆகிய பூக்கள் கிலோ ரூ.10க்கு விற்பனையாவதால், அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை.

இதனால், 15 நாட்களாக விவசாயிகள், பூக்களின் அறுவடையை நிறுத்தியதால், செடிகளிலேயே பூத்துக் குலுங்கின. வ.உ.சி., மார்க்கெட், கரோனாவால் மூடப்பட்ட நிலையில், பொது போக்குவரத்து மட்டுமின்றி, லாரிகளில் சரக்கு முன்பதிவும் நிறுத்தப்பட்டு விட்டது.

சேலம் மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு செல்வது, முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், ரூ.50 கோடி மதிப்புள்ள பூக்கள், செடிகளிலேயே கருகி வீணாகி வருவதாக, விவசாயிகள் கண்ணீருடன் கவலை தெரிவித்தனர்.

Spread the love