June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சேலம் மாவட்ட வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகள்

சேலம், ஏப்.9

சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.பிரபாகரன், வேளாண் காலநிலை கண்காணிப்பாளர் ஆகியோர் கூறியதாவது :

வரும் நான்கு நாட்களுக்கு (10.04.22 முதல் 13.04.22 வரை) விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வேளாண் ஆலோசனைகள்

v சேலம் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களில் இலேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை40oC ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25oC ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 0 முதல் 6கி.மீ ஆக வீசக்கடும்.
v நிலவக்கூடிய வானிலையின் காரணமாக மல்லிகையில் இலைப்புள்ளி நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த இலைவழி தெளிப்பாக மேங்கோசெப் மருந்தினை 2.5 கிராம்/லிட்டர் என்ற அளவில் மாத இடைவெளியில் தெளிக்கவும்.
v காய்கறி பயிர்களுக்கு நுண்ணூட்டம் உரமிடுதல் நல்ல பயனளிக்கும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் உள்ள காய்கறி பயிர்களுக்கு நுண்ணூட்டத்தை நீர் பாசனம் வழிவிடுதல் அல்லது இலைவழியாக தெளிக்கவும்.
v தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு தாக்கம் காணப்படுவதால் அதை கட்டுப்படுத்த டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை @ 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/எக்டர்/முறை) என்ற அளவில் விட வேண்டும்.
v சோளத்தில் குருத்து ஈயின் பிரச்சனைகள் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புழுக்கள் தண்டுகளை துளைத்து உள்ளே சென்று உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும். நடுக்குருத்தின் அடிப்பாகத்தை தாக்குவதால் நடுக்குருத்து அழுகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த சரியான பருவத்தில் முன்கூட்டியே விதைப்பு செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். குருத்து ஈயை கட்டுப்படுத்த குவின்னல் பாஸ் 25 இ.சி 1500 மி.லி/எக்டர் என்ற அளவில் பயன்படுத்தவும். அறுவடைக்கு பிறகு பயிர்த் தட்டைகளை அகற்றி அழித்து விட்டு உடனடியாக உழவினை மேற்கொள்ள வேண்டும்.
v நிலவக்கூடிய வானிலையின் காரணமாக பருத்தியில் இலைகருகல் நோய் ஏற்படக்கூடும். ஆரம்பத்திலேயே அறிகுறிகள் தெரிந்தவுடன் மேங்கோசெப் 2 கிலோ/எக்டர் என்ற அளவில் 2 அல்லது 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
v தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் வாழை பயிரில் இலைப்புள்ளி நோய் தாக்கம் தென்பட்டால் கார்பென்டாசிம் 1 கிராம்/லிட்டர் அல்லது புரோபிகோனசோல் 1மி.லி/லிட்டர் அல்லது மேங்கோசெப் 2.5 கிராம்/லிட்டர் மற்றும் ஒட்டு ம்திரவம் 1.0 மிலி/லிட்டர் கலந்து 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

கால்நடைகளைப் பொறுத்தமட்டில்,
v தற்போது நிலவும் வெப்பநிலையில் கால்நடைகளை குளிப்பாட்டிய பிறகு காலை 11 மணிக்குள் செயற்கை கருத்தரிப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும். பால்கறக்கும் விலங்குகள் மற்றும் எருமைகளுக்கு அவற்றின் உடலில் தண்ணீர் தெளிக்கவும். கால்நடைகள் தானாக முன்வந்து குடிப்பதற்கு போதுமான குடிநீர் வைக்கவும்.
v வெப்பநிலை சற்று உயர்ந்து வருவதால் கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதை தவிர்க்க கோழி பண்ணைகளில் இரு ஓரங்களிலும் நனைந்த சாக்கை கட்டிவிட வேண்டும்.
v செம்மறி ஆடுகளில் அம்மை நோய் வராமல் தடுக்க ஜனவரி மாதத்தில் நோய் வர வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும்.
v நாட்டுக் கோழிகளுக்கு புரதச் சத்துமிக்க அசோலாவை தீவனமாக அளிப்பதின் மூலம் விரைவான உடல் வளர்ச்சி அடைவதுடன் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.
v கறவை மாடுகளில் தெளிவற்ற மடி நோயை கட்டுப்படுத்த தனுவாஸ் மாஸ்டிகார்ட் கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை பால் கறந்த பின் மடி மற்றும் காம்பு மீது தெளிக்கப்பட வேண்டும்.
v தினமும் புகை மூட்டுவதன் மூலம் கொசுக்கடியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம் (அதிக புகைமூட்டம் கால்நடைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும்). சுற்றுப்புறத்தில் நீர் தேங்காதவாறு பாதுகாப்பதன் மூலம் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கலாம்.
v கால்நடைகள் மற்றும் கோழிகள் எக்டோபராசைட்கள் இல்லாமல் இருக்க வேண்டும், எனவே 3 மாதங்களுக் குஒரு முறை அகற்றவும்.
v கால்நடைகளில் பிளே கடித்தால் உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சையாக வெற்றிலை கொடியின் இலைகள், உப்பு, மிளகுத்தூள் கலவையை டோனிக்கு கீழே பயன்படுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203. 0427 242 2550, 90955 13102, 70109 00282.

Spread the love