May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சைடஸ் வெல்னஸ் நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 93 சதம் உயர்வு

புது தில்லி, மே 11

முன்னணி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சைடஸ் வெல்னஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 92.6 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

மருந்து விற்பனை தேவையில் சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து, 2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 133.13 கோடியாக உயர்ந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.69.10 கோடியுடன் ஒப்பிடுகையில் 92.66 சதம் அதிகமாகும்.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை ரூ.484.76 கோடியிலிருந்து ரூ.600.75 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்துக்கு ரூ.118.73 கோடி நிகர லாபமாக கிடைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த விற்பனை ரூ.1,734.19 கோடியிலிருந்து ரூ.1,853.66 கோடியாக உயர்ந்துள்ளது. குளுகோன்-டி, சுகர் ப்ரீ, எவர்யூத் ஸ்க்ரப், பீல் ஆஃப் பேஸ் மாஸ்க் மற்றும் நைஸில் ஆகிய ஐந்து பிராண்டுகளின் விற்பனை சந்தையில் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன. மேலும், கடந்த 2020-21ம் நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 இறுதி ஈவுத்தொகையாக வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக சைடஸ் வெல்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love