January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

திருப்பூர், மே 19

குடிமங்கலம் வட்டார விவசாயிகள், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, முன்பதிவு செய்யலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்காக, பிரதம மந்திரி சொட்டு நீர் பாசன திட்டம், முதன்மை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக பரப்பளவில், பயிர் சாகுபடி செய்ய, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சொட்டு நீர் பாசனம் அமைக்க, முன்வரும், சிறு, குறு விவசாயிகளுக்கு, நுாறு சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு, விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மானியம் மட்டுமல்லாது, துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம், கிடைக்கும். இதில், டீசல் பம்ப் செட், மின்மோட்டார் பம்ப் செட் நிறுவ, 50 சதவீத மானியம், ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமலும், பாசன குழாய் அமைக்க, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன், தரைநிலை நீர் தேக்க தொட்டி, நிறுவ, கன மீட்டருக்கு, ரூ.350 வீதம், 40 ஆயிரம் ரூபாய் மானியத்தொகை முழுவதும், விவசாயிகளின் சேமிப்புக்கணக்கில், நேரடியாக விடுவிக்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ரேஷன் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, வி.ஏ.ஓ., சான்றிதழ், ஆதார் அட்டை, நிலவரைபடம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3 வங்கி கணக்குப்புத்தகம், சிறு, குறு விவசாயி சான்று ஆகியவற்றின் நகல்களை, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் – 75400 32257, தோட்டக்கலை அலுவலர் 98650 75473, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், குடிமங்கலம் உள்வட்டம் – 88836 10449; பெதப்பம்பட்டி உள்வட்டம் – 99762 67323 ஆகிய மொபைல் எண்களில், தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love