June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சொட்டு நீர் பாசனத்துக்கு மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை, ஜூன் 7

பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்துக்கு, வேளாண் துறை வாயிலாக, ரூ.1.34 கோடி சொட்டுநீர் பாசன மானியம் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறைக்கு, நடப்பு, 2021-22ம் ஆண்டுக்கான சொட்டுநீர் பாசன மானிய நிதியாக, ரூ.1.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரை சொட்டு நீர் பாசனம் அமைக்காத விவசாயிகள், இதற்கு முன்பு மானியம் பெற்று சொட்டுநீர் பாசனம் அமைத்து, 7 ஆண்டுகள் கடந்த விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு, நூறு சதவீதம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 110 ஹெக்டேருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கவும், 90 ஹெக்டேருக்கு தெளிப்பு நீர் பாசனம் (ஸ்பிரிங்ளர்) அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி அறிக்கை மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Spread the love