July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சொனெட்டில் புதிய வேரியண்ட்கள்: கியா தகவல்

புது தில்லி, ஏப்.24

மீபத்தில் பிராண்டின் புதிய லோகோவை பெற்ற சொனெட் கார்கள் இந்திய டீலர்´ப் ஷோரூம்களை வந்தடைய துவங்கின.

புதிய லோகோவை பெற்ற கியா கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்கப்படவுள்ள நிலையில், சொனெட்டின் சில வேரியண்ட்கள் அப்டேட் செய்யப்பட்டிருப்பது தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

சொனெட் மட்டுமின்றி செல்டோஸிலும் சில வேரியண்ட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த இரு எஸ்யூவி கார்களில் தற்போதைய சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படவுள்ளன.

அவற்றிற்கு பதிலாக கியா சொனெட்டில் எச்டிஎக்ஸ் இண்டெலிஜண்ட் மேனுவல் (ஐஎம்டி) பெட்ரோல், எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல், எச்டிஎக்ஸ் மேனுவல் டீசல் மற்றும் எச்டிஎக்ஸ் ஆட்டோமேட்டிக் டீசல் என்ற புதிய வேரியண்ட்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொனெட்டின் இந்த எச்டிஎக்ஸ் வேரியண்ட்களில் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், ட்ராக்‌­ன் கண்ட்ரோல், இஎஸ்சி, எச்ஏசி, விஎஸ்எம் உள்ளிட்ட அம்சங்களும், எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல் வேரியண்ட்டில் கூடுதலாக பல ட்ரைவிங் மோட்களும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளது.

எச்டிஎக்ஸ் டிசிடி பெட்ரோல் வேரியண்ட் ஆனது சொனெட்டின் எச்டிகே ப்ளஸ் & ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.11.50 வரையில் எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love