May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சோனி நிறுவனம் 15 சதம் லாபம் ஈட்டியது

மும்பை, ஏப்.29

சோனி கார்ப்பரேசன் நிறுவனம் 14.9 சதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் சமீபத்திய பி¼ளஸ்டேசன் 5 உலகம் முழுக்க சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் சுமார் 45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 33 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த வியாபாரத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் சேவைகள் பிரிவில் மட்டும் சோனி கணிசமான லாபம் ஈட்டியுள்ளது. இதன் மின்னணு பொருட்கள் பிரிவு 3 சத சரிவடைந்துள்ளது. டிஜிட்டல் கேமரா, ஒளிபரப்பு, தொழில்முறை ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்கள் விற்பனையும் சரிவடைந்து இருப்பதாக சோனி தெரிவித்துள்ளது.

Spread the love