May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சோளப் பயிர்களைத் தாக்கும் குருத்து ஈயினைக் கட்டுப்படுத்த மீன் இறைச்சிப் பொறி

மதுரை, மார்ச் 8

மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவி க.சண்முகி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள சின்னப்புளியம்பட்டியில் சோளப் பயிர்களைத் தாக்கும் குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்த மீன் இறைச்சி பொறி பற்றிய செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார். ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் 4 முதல் 5 துளையிட்டு 10 முதல் 15 கருவாட்டு துண்டுகளைப் போடவும்.
பிறகு சிறிதளவு தண்ணீரை ஊற்றவும்,
ஒரு கயிற்றைக் கொண்டு சோளப் பயிரில் கட்டவும்.
காய்ந்த கருவாடு வாசனையுடன் குருத்து ஈ கவரப்படுவதால் பூச்சிகளின் தாக்குதல் 40-60 சதவீதம் வரை குறையும்.

ஒரு ஏக்கருக்கு 10-15 பொறி வைக்க வேண்டும் என எடுத்துக் கூறினார். செயல்முறை விளக்கத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் இயற்கையான முறையில் குருத்து ஈக்களைக் கட்டுபடுத்த மீன் இறைச்சி பொறி எளிமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக கூறினர்.

Spread the love