புது தில்லி, டிச.24
நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை, ஜனவரியிலிருந்து உயர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து செய்தியாவது: உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரித்து வருவதை அடுத்து, அதை சமாளிக்கும் விதமாக, இந்நிறுவனம், அதன் அனைத்து மாடல் வாகனங்களுடைய விலையை, ரூ.2 ஆயிரம் வரை அதிகரிக்க உள்ளது. மேலும், இந்த விலை உயர்வு, வரும் ஜனவரி 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்றும்; இதன் வாயிலாக உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்க இயலும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.