January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜனவரி இறுதி கொரோனா பரவல் அதிகரிக்கும் – கணித ஆய்வாளர் புதிய தகவல்

புது தில்லி, ஜன.10

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என்றும், நாடு முழுதும் நாள் ஒன்றுக்கு 4 – 8 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவர் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கொரோனா தொற்று பரவலில் முந்தைய அலைகளின் பாதிப்பு தீவிரத்தை கணித சூத்திரத்தின் அடிப்படையில் கணித ஆய்வாளர் மணிந்தர் அகர்வால் கணித்து வருகிறார். உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியரான இவர், மத்திய அரசின் உதவியுடன் இந்த பணியை செய்து வருகிறார்.

மூன்றாவது அலை குறித்து இவர் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா மூன்றாவது அலையை ஏற்கனவே சந்தித்து வரும் மும்பை மற்றும் தில்லி நகரங்களில் இம்மாத மத்தியில் தொற்று பரவல் உச்சம் தொடும். டில்லியில் நாள் ஒன்றுக்கு 50 – 60 ஆயிரம் பேருக்கும், மும்பையில் 30 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றார். மேலும், இந்த மாத இறுதியில் நாடு முழுதும் மூன்றாவது அலை உச்சம் தொடும். அப்போது நாள் ஒன்றுக்கு 4 – 8 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவர். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அலை தொற்று பரவும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் பிரசாரங்கள்மூன்றாவது அலை வேகமாகப்பரவக் காரணமான பல வி­யங்களில் தேர்தல் பிரசாரங்கள் ஒன்றாக இருக்கும். அதை மட்டும் நீக்குவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்திவிட முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love