August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜனவரி-மார்ச் வரையிலான காலத்தில் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 21 சதம் உயர்வு

புது தில்லி, மே 19

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 7 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை, 21 சதம் உயர்ந்துள்ளதாக தரவு பகுப்பாய்வு நிறுவனமான, பிராப்ஈக்விட்டி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, பிராப்ஈக்விட்டி நிறுவன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மார்ச் காலாண்டில், நாட்டின் முக்கிய, 7 நகரங்களில் வீடுகள் விற்பனை, 21 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இருப்பினும், புதிய வீடுகள் சப்ளை, 40 சதம் அளவுக்கு சரிவைக் கண்டிருக்கிறது. மார்ச் காலாண்டில் மொத்தம், 1.05 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை பெருநகர பகுதி, டெல்லி தலைநகர பிராந்தியம் மற்றும் புனே ஆகிய நகரங்களில், வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கோல்கட்டாவில், 20 சதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது, முடிக்கப்படும் நிலையிலிருக்கும் புதிய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இருப்பினும், ஜூன் காலாண்டில், இரண்டாவது அலை காரணமாக தேவை குறைய வாய்ப்புள்ளது.சென்னையில் வீடுகள் விற்பனை, 29 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஐதராபாதில், 16 சதமும்; தில்லி தலைநகர் பிராந்தியத்தில், 6 சதமும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love