புது தில்லி, ஏப்.27
முன்னணி சொகுசுக் கார் தயாரிப்பாளரான போர்ஷே இந்தியா நிறுவன வாகனங்களின் விற்பனை, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 52 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் 154 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கையைவிட 52 சதம் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் சொகுசுக் கார்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவிட் நெருக்கடிக்கு இடையிலும், புதிய ரகங்களின் அறிமுகம் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது என்று அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.