January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜன.1 முதல் ஏடிஎம் கட்டணம் உயர்கிறது: ஆர்பிஐ

புது தில்லி, டிச.24

ஏடிஎம்களில், பணம் எடுப்பதற்கான கட்டணம் ஜன.1 முதல் உயர்கிறது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பாவது:

ஏடிஎம் பராமரிப்பு செலவுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம், 2014க்கு பின் உயர்த்தப்படவில்லை. மேலும், செலவு அதிகரிப்பதால் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனைத்து வங்கிகளும் அனுமதி கோரியிருந்தன. வங்கிகளின் கோரிக்கையை ஏற்ற ஆர்பிஐ, கட்டணத்தை உயர்த்த கடந்த ஜூனில் அனுமதி அளித்தது. இதனால் ஜன.1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கிகளின் ஏடிஎம் என்றால் மாநகரங்களில் மூன்று முறையும், நகரங்களில் ஐந்து முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.அனுமதிக்கப்பட்ட இந்த தவணை முடிந்த பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், பரிவர்த்தனை கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது; இது, ஜன.1 முதல் ரூ.21 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் ரூ.8 வசூலிக்கப்படும். இவ்வாறு ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love