August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம்

Vials labelled "COVID-19 Coronavirus Vaccine" and sryinge are seen in front of displayed Johnson&Johnson logo in this illustration taken, February 9, 2021. REUTERS/Dado Ruvic/Illustration

புது தில்லி, மே 12

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் தடுப்பூசியை கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்த புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி டேனியல் பி. சுமித் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க

எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

மேலும், உலகளவில் கோவிட் தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. நாங்கள் இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பிற இடங்களில் உற்பத்தி நிலைகளை கவனமாக கவனித்து வருகிறோம்.

நாங்கள் என்ன மூலப்பொருட்களை வழங்க முடியும் என்பதைத் தீர்மானிக்க இந்திய சீரம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். மேலும் உற்பத்தியை அதிகரிக்க தேவையான உதவிகளை நாங்கள்

செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love