May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜாய் ஹைஸ்பீட் இ-பைக்குகள் இந்தியாவில் புதிய அறிமுகம் விலை தான் அதிகம்…!

ஜாய் என்ற பிராண்ட் பெயரில் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வார்ட்விசார்ட் இன்னோவேஷன் & மொபிலிட்டி நிறுவனம் இந்த ஜாய் என்ற பிராண்ட் பெயரில் இ-பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந் நிறுவனம் 4 புதிய அதிவேக மோட்டார் சைக்கிள்களை

ஹர்ரிகேன், தண்டர்போல்ட், ஸ்கைலைன் மற்றும் பீஸ்ட் என்ற பெயர்களில் இந்த நான்கு எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஸ்கைலைன் மாடலின் குறைந்தபட்சமாக ரூ.2.29 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஹர்ரிகேன் & தண்டர்போல்ட் பைக்குகளின் விலை ரூ.2.33 லட்சம் ஆகவும், பிரீமியம் ரக பீஸ்ட் இ-பைக் விலை ரூ.2.42 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஹர்ரிகேன் மற்றும் பீஸ்ட் மாடல்கள் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகத்திலும், தண்டர்போல்ட் மற்றும் ஸ்கைலைன் மாடல்கள் பேனல்களால் மூடப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் ரகங்களாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் டீசர் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஸ்கைலைன் மாடலில் டிசி ப்ரஷ்லெஸ் ஹப் மோட்டார் உள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 72Ah லித்தியம் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 5 கிலோவாட்ஸ் மற்றும் 230 என்எம் டார்க் திறனைப் பெற முடியுமாம். இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 90கிமீ வேகத்திலும், சிங்கிள்-முழு சார்ஜில் 110கிமீ வரையிலும் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைலைனில் உள்ள சஸ்பென்ஷன் & பிரேக் அமைப்புகளையே தண்டர்போல்ட் மற்றும் பீஸ்ட் பைக் பெற்றுள்ளன. இந்த மூன்று மாடல்களிலும் 10 ஆம்பியர் ஸ்மார்ட் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 9 மணிநேரம் ஆகும்.

ஹர்ரிகேன் இ-பைக்கிலும் இதே அம்சங்கள் தான் உள்ளன. ஆனால் சற்று குறைவான திறன் மதிப்பை கொண்ட 54 Ah பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் பயண தூரம் 75கிமீ ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜாய் பிராண்டில் இ-மான்ஸ்டர் இ-மோட்டார்சைக்கிளும், வூல்ஃப், க்ளோப் & ஜென் நெக்ஸ்ட் நானு என்கிற பெயர்களில் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனையில் உள்ளன.

Spread the love