August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜிண்டால் பவரின் பங்குகள் விற்பனை செய்ய ஜேஎஸ்பிஎல் குழு ஒப்புதல்

புது தில்லி, ஏப்.28

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் வாரியம், ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தனது முழு பங்கினை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தின் முழு பங்கினையும், அதாவது 96.42% பங்கினை ரூ.3,015 கோடிய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாக ஜேஎஸ்பிஎல் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிராண்ட் தோர்டன் அட்வைசரி நடத்திய விரிவான ஏல முறையில், வேர்ல்டோன் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் கையகப்படுத்துவர் அதாவது வேர்ல்டோன் நிறுவனம் ஜிண்டாலில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஜேஎஸ்பிஎல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பாவது:

ஜிண்டால் பவரின் பங்குகளை விற்க, வோர்ல்டோனிடமிருந்து சலுகையை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த பங்கு விற்பனையானது ஜேஎஸ்பிஎல் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குனர்களிடமிருந்து ஒப்புதல், மற்ற சட்ட ரீதியிலான ஒப்புதல்கள், அனுமதிகள் என அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பங்கு விற்பனை குறித்து ஜேஎஸ்பிஎல் தெரிவிக்கையில், கடனை தொடர்ச்சியாக குறைத்து, அதன் இந்திய ஸ்டீல் வணிகத்தில் கவனம் செலுத்தவும், இந்த ஜிண்டால் பவரின் முழு பங்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Spread the love