September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளியீடு ஒத்திவைப்பு

புது தில்லி, செப்.10

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போனை தயாரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் வெளியீடு தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

மேலும், தற்போது சோதனை முயற்சியாக, சிலரிடம் இந்த ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு, செயல்பாட்டை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன் அம்சங்களை மெருகேற்ற கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனில், கூகுள் அசிஸ்டென்ட், தன்னிச்சையாக உரக்கப் படிக்கும் திறன், செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து தரும் வசதி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா உட்பட, பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Spread the love