August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு 300 நிமிட இலவச அழைப்பு வழங்குகிறது ஜியோ

மும்பை, மே 15

கோவிட் தொற்று பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு 300 நிமிட இலவச அழைப்புகçள வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கோவிட் தொற்று முன்னெப்போதும் பார்த்திராத கடினமான காலத்தை உருவாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் அனைவரும் இணைந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகை அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, கோவிட் தொற்று பேரிடர் காலம் முழுவதும் ஜியோபோன் பயனாளர்களுக்கு மாதத்துக்கு 300 நிமிட (நாயளான்றுக்கு 10 நிமிடம்) இலவச அழைப்புகள் வழங்கப்படவுள்ளது. ரிலையன்ஸ் பவுண்டேசன் உடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

தற்போதைய ஊரடங்குகாலத்தில் வெளியில் சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்ளுக்கு இந்த சலுகை திட்டம் சிறப்பானதாக இருக்கும். இருப்பினும், இந்த சலுகை வருடாந்திர திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு பொருந்தாது என ஜியோ நிறுவனம் அந்த செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love