May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில்‌
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்‌

தேனி, மார்ச் 10

தேனி கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ கால்நடை சிகிச்சை வளாகமானது, பெரியகுளம்‌ தோட்டக்கலை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்துடன்‌ இணைந்து தேசிய நாட்டு நலப்பணி திட்டத்தின்‌ மூலம்‌ ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில்‌ சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது. இம்முகாமை தேனி கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதல்வர்‌ பி.என்‌.ரிச்சர்டு ஜெகதீசன் தொடங்கி வைத்து கால்நடைகளுக்குத்‌ தேவையான தாது உப்புக்கலவை மற்றும்‌ கால்நடை வளர்ப்பு குறித்த கையேடுகளை வழங்கினார்‌. முகாமில்‌ ஸ்கேன்‌ கருவி மூலம்‌ சினைப்பரிசோதனை மற்றும்‌ சினைப்பிடிக்காத மாடுகளுக்கான பரிசோதனைகள்‌ செய்யப்பட்டு தகுந்த பராமரிப்பு மற்றும்‌ மருத்துவ ஆலோசனைகள்‌ வழங்கப்பட்டன. முகாமில்‌ ஆடுகள்‌, மாடுகள்‌, வளர்ப்பு நாய்கள்‌ மற்றும்‌ கோழிகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை மற்றும்‌ இதர நோய்களுக்கும்‌ தகுந்த சிகிச்சைகள்‌ வழங்கப்பட்டன. முகாமில்‌ கால்நடை சிகிச்சை வளாக பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர் உமா ராணி, உதவிப்பேராசிரியர்கள்‌ அருண்‌. இராஜதுரை மற்றும்‌ கெங்குவார்பட்டி கால்நடை உதவி மருத்துவர்‌ சுரேஷ்‌ ஆகியோர்‌ கால்நடை மருத்துவ முகாமிற்குக்‌ கொண்டு வரப்பட்ட 105க்கும்‌ மேற்பட்ட கால்நடைகளுக்குத்‌ தேவையான சிகிச்சைகளை வழங்கினர்‌. மேலும்‌ முகாமில்‌ தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியருக்கும்‌ பொது மக்களுக்கும்‌ கால்நடை வளர்ப்பின்‌ முக்கியத்துவம்‌ குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Spread the love