January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசமாக பெறலாம்

கோவை, மே 8

திசு வாழைக்கன்றுகளை இலவசமாக பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : கோவை மாவட்டம், அன்னூர் வட்டார சிறு, குறு, பெரிய விவசாயிகள் வாழை பயிரிட விரும்பினால், தேசிய தோட்டக்கலை திட்டத்தில் ஜி 9 ரக திசு வாழைக் கன்றுகளை இலவசமாக பெறலாம். அதிகபட்சமாக ஒரு விவசாயி, 2 எக்டேருக்கு, 5,000 வாழைக் கன்றுகளை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றுடன் அன்னூர் தோட்டக்கலை அலுவலகத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். கண்ணம்பாளையம் அல்லது ஆனைகட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை இல்லத்தில் வாழைக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அன்னுார், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், கஞ்சப்பள்ளி, ஆம்போதி, அல்லப்பாளையம், வடக்கலூரை சேர்ந்தவர்கள் 97919 98833 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். குப்பேபாளையம், காட்டம்பட்டி, குன்னத்தூர், பிள்ளையப்பம்பாளையம், கரியாம்பாளையம், பசூர், அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் 95784 52676 என்ற மொபைல் எண்ணிலும், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடவள்ளி, காரேகவுண்டன்பாளையம், ஒட்டர்பாளையம், கணுவக்கரை பகுதி விவசாயிகள் 99433 66422 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love