January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூன் மாதம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: விப்ரோ

பெங்களூரு, ஏப்.23

நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் கடந்த 2020ம் கோவிட் பேரிடரால் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்க முடியாத நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2020க்கான சம்பள உயர்வை அளித்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வை ஜூன் மாதம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் சம்பள உயர்வு அளிக்கும், ஆனால் இந்த ஆண்டு விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்கள் ஓரே ஆண்டில் 2வது முறையாகச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 ஜனவரி மாதத்தில் விப்ரோ நிறுவனம் தனது 80 சதவீத ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளித்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வு அனைத்து ஊழியர்களுக்கும், அதாவது 1.97 லட்சம் ஊழியர்களுக்கும் வருகிற ஜூன் மாதம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் ஜூன் மாத சம்பள உயர்வில் மார்ச் காலாண்டு வளர்ச்சி அளவீட்டின் பாதிப்பு பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வுடன், ஸ்கில் அடிப்படையிலான போனஸ் தொகையும் இந்த ஜூன் காலாண்டில் அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களைத் தக்க வைக்க முடியும் என விப்ரோ தெரிவித்துள்ளது.

Spread the love