August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு?

சேலம், மே 15

மேட்டூர் அணையில், நடப்பாண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படும் என்று, விவசாயிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடியாகும். ஆண்டுதோறும் ஜூன், 12ல் டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். பாசனத்துக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடி, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, 101 அடியாக இருந்தது. இதனால், 11 ஆண்டுக்கு பின், தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 97.72 அடி, நீர் இருப்பு, 61.92 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர் திறக்க இன்னும், 29 நாள்கள் உள்ளன. தற்போது குடிநீருக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் ஜூன், 12க்குள் இருப்பு மேலும், 2 டி.எம்.சி., குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், அன்றைய நாளிலும், குறைந்தபட்ச நீர் இருக்கும். எனவே, இரண்டாவது முறையாக தொடர்ந்து, நடப்பாண்டிலும் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்துக்கு நீர் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Spread the love