August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூலைக்குள் 51.6 கோடி பேருக்கு தடுப்பூசி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை

வரும் ஜூலை மாதத்திற்குள் 51.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஹர்ஷ்வர்தன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான காரணங்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:

நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 18 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஜூலை மாத இறுதிக்குள் 51.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும். ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்கும் தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது. எனவே, தடுப்பூசிகளுக்கு இனி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை

குஜராத்தைப் பொறுத்தவரை அங்கு கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. குணமடைவோரின் விகிதமும் 79 சதவீதமாகவே உள்ளது. தேசிய அளவில் குணமடைவோரின் விகிதத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் பேசினார்.

Spread the love