August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூலையில் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டம்

பெங்களூரு, ஏப்.24

வாடகை கார் சேவை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஓலா நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்க உள்ளது. ஓசூர் அருகே உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன ஆலையை அந்நிறுவனம் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் விபரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலாவது:

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சார்ஜ் மூலமாக 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை இந்த ஸ்கூட்டர் வழங்கும்.

இதனை வைத்து பார்க்கும்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டரியை ஒரு மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் உள்ளிட்ட சந்தையில் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைவிட ஓலாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக தூரம் பயணிக்கும் திறனை பெற்றிருப்பதோடு, மிக குறைவான நேரத்தில் சார்ஜ் செய்யும் வாய்ப்பையும் வழங்கும் என ஓலா தெரிவித்துள்ளது.

வரும் ஜூலையில் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Spread the love