October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூலை-செப்டம்பர் காலத்தில் ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி உயர்வு

புது தில்லி, அக்.12

கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜேஎஸ்டபிள்யூ குழு நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி 29 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜேஎஸ்டபிள்யூ குழும நிறுவனங்கள் 50.7 லட்சம் டன் உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் உற்பத்தியான 39.2 லட்சம் உருக்குப் பொருள்களுடன் ஒப்பிடும்போது 29 சதம் உயர்வாகும்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் தனிப்பட்ட உருக்கு உற்பத்தியானது கணக்கீட்டு காலாண்டில் 38.50 லட்சம் டன்னிலிருந்து 6 சதம் அதிகரித்து 41 லட்சம் டன்னை எட்டியதாகதெரிவித்துள்ளது.

ரூ.97,500 கோடி மதிப்பிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் முக்கியமான நிறுவனமாக ஜேஎல்டபிள்யூ உள்ளது. மேலும், எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமென்ட், பெயிண்ட், விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love