June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜூலை 31 வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, ஏப்.28

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்குமாறு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் என அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்தன.

அதன்படி, 4 மாதங்களுக்கு மட்டும் உற்பத்தி செய்ய தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்திருந்தது. மேலும், தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்றும், ஆக்சிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும், ஜூலை 31க்கு பிறகு அப்போதைய சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Spread the love