புது தில்லி, மே 5
நாட்டில் கோவிட் தொற்று அதிகரிப்பு காரணமாக ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 4 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதல் இரு கட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், கோவிட் பரவலால் எஞ்சிய இரு கட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மே 24 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.