August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி கடந்த ஏப்ரலில் 13.71 லட்சம் டன்னாக அதிகரிப்பு

புது தில்லி, மே 12

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 13.71 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந் நிறுவனம் 5.63 லட்சம் டன் உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி இருமடங்கு அதிகரித்து 13.71 லட்சம் டன்னை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 2021 மார்ச் மாத உற்பத்தியான 14.46 லட்சம் டன் உருக்குப் பொருள்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் உற்பத்தி 5 சதம் சரிந்துள்ளது.

ஏப்ரலில் தட்டை வடிவ உருக்குப் பொருள்களின் உற்பத்தி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 3.44 லட்சம் டன்னிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து 9.57 லட்சம் டன்னை எட்டியுள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் இதன் உற்பத்தியான 10.50 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் 9 சதம் உற்பத்தி குறைந்துள்ளது.

மேலும், நீண்ட வடிவிலான உருக்குப் பொருள்களின் உற்பத்தி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரலில் 0.89 லட்சம் டன்னிலிருந்து 3.37 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு மார்ச்சுடன் ஒப்பிடும்போது இது 3.54 லட்சம் டன்னிலிருந்து 5 சதம் குறைந்து 3.37 லட்சம் டன்னானது என ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love