June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டாக்டர் ரெட்டீஸ் -ஷில்பா மெடிகேர் இடையே ஒப்பந்தம்

ஹைதராபாத், மே 18

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கோவிட் தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடன் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ´ஷில்பா மெடிகேர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்வதற்கான 3 ஆண்டு ஒப்பந்தம் ´ல்பா மெடிகேர் நிறுவனத்துக்குச் சொந்தமான ´ஷில்பா பயோலாஜிகல்ஸ் தனியார் நிறுவனத்துக்கும் (எஸ்பிபிஎல்) டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துக்கும் இடையே கையயழுத்தாகியுள்ளது என ´ஷில்பா மெடிகேர் தாக்கல் செய்த ஒழுங்குமுறை தாக்கல் படிவத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து ´ஷில்பா மெடிகேர் மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தொழில்நுட்பத்தை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் எஸ்பிபில் நிறுவனத்திடம் வழங்கும். அதன் மூலம், வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கிய தேதியிலிருந்து முதல் 12 மாதங்களுக்கு முதல் தொகுப்பின் கீழ் 5 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்யும் பணிகளை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்று ´ஷில்பா மெடிகேர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் இந்த தடுப்பூசியின் அதிகபட்ச விலையை ரூ. 948-ஆக அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதன் சில்லறை விற்பனை விலை ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ. 995.40 ஆகும். ரஷியாவில் அந்த தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனத்துடன் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக இரண்டு தொகுதிகளாக 2.10 லட்சம் ஸ்புட்னிக்-வி டோஸ்களை அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. மேலும் 3.6 கோடி தடுப்பூசிகளை அந்த நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது.

Spread the love