May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டாப் எண்ட் மாடல் விலையை ரூ.3.80 லட்சம் வரை பிஎம்டபிள்யூ நிறுவனம் உயர்த்தியது

புது தில்லி, ஏப்.30

தனது டாப் எண்ட் மாடல் விலை ரூ.3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது 3 சீரிஸ், 2 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 உள்ளிட்ட மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்லைன் மற்றும் 220ஐ எம் ஸ்போர்ட் குயிஸ் விலை முறையே ரூ.80 ஆயிரம் மற்றும் ரூ.60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட 220ஐ ஸ்போர்ட் ட்ரிம் விலை மாற்றப்படவில்லை.

மேலும், 3 சீரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்­ன்களில் பெட்ரோல் வேரியண்ட் 330ஐ ஸ்போர்ட் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் மாடல்கள் முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ.60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 320டி லக்சரி எடி­ன் விலை ரூ.60 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ எஸ் டிரைவ் 20ஐ ஸ்போர்ட்எக்ஸ் மற்றும் எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் மாடல்கள் விலை முறையே ரூ. 1,30,000 மற்றும் ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலான எஸ்டிரைவ்20டி எக்ஸ்லைன் விலை ரூ.1,10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எக்ஸ்3 சீரிஸ் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்5 எஸ்யுவி விலை ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 மாடல்கள் விலை முறையே ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Spread the love