அரியலூர், மார்ச் 27
அரியலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கு சூப்பர் பாஸ்பேட தேவை 255 மெ.டன். தற்போது 269 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பில் உள்ளது. டிஏபி உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக டிஏபி உரம் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. இதற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான மணிச்சத்து 16 சதவீதம் உள்ளது.
மேலும் கந்தகம் எனப்படும் சல்பர் 11 சதவீதம், சுண்ணாம்புச்சத்து எனப்படும் கால்சியம் 21 சதவீதம் மற்றும் சில நுண்ணூட்ட சத்துக்களும் சிறிதளவு சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளன. இவை பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் ஆகும். சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்து நீரில் எளிதில் கரையும் தன்மையுடையதாகையால் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கிறது.