July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டம்

சென்னை, மே 4

தனது டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை வோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தனது நான்காவது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது.

டிகுவான் எஸ்யுவி மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும், சிறிது காலத்திற்கு இந்த மாடல் விற்பனையை நிறுத்தி, பின் புது தோற்றத்தில் இந்த மாடலை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், தற்போது இந்த மாடலின் பேஸ்லிப்ட் வெர்சனை மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருந்தது. எனினும், புது மாடல் வெளியீட்டை வோக்ஸ்வேகன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மெல்லிய யஹட்லேம்ப்கள், கூர்மையாக காட்சியளிக்கும் கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், இதன் மத்தியில் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பரில் முன்புற சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

இந்த கார் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் கொண்டிருக்கும். இது 190 பியஹச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4MOTION ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Spread the love