January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டிச.28ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல், டிச.23

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவர்கள் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 28.12.2021 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது. எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைபாடுகள் மற்றும்; கோரிக்கைகளை எழுத்து வடிவில் இரண்டு பிரதிகள் அளிக்கலாம் என இதன் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love