October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டிஜிட்டல் சொத்து மேலாண் வர்த்தகம் ஃபிஸ்டம் நிறுவனத்துடன் கூட்டுறவை விரிவுபடுத்துகிறது இந்தியன் வங்கி

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி, டிஜிட்டல் சொத்து மேலாண்மை வர்த்தகத்தில் கவனம் செலுத்துவதற்காக நிதி தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டுள்ள ஃபிஸ்டம் நிறுவனத்துடனான கூட்டுறவை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே பரஸ்பர நிதி சேவைக்காக மட்டும் இவ்விரு நிறுவனங்களும் கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளன, இந்த நிலையில் இந்தியன் வங்கியின் மொபைல் ஆப்களில் டிஜிட்டல் கோல்டு மற்றும் ஆன்லைன் டாக்ஸ் ஃபைலிங் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காகவும் இந்தக் கூட்டுறவை விரிவுபடுத்த அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டுறவின் வாயிலாக இந்தியன் வங்கியின் செல்வந்த வாடிக்கையாளர்கள் PMS, AIF, FI உள்ளிட்ட சேவைகளை மொபைல் செயலியிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதுதொடர்பான கூட்டுறவு விரிவாக்க ஒப்பந்தத்தில், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் அமின் சித்திக் முன்னிலையில் இந்தியன் வங்கி பொது மேலாளர் சந்திர ரெட்டி மற்றும் ஃபிஸ்டம் இணை நிறுவனர் ஆனந்த் டால்மியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

டிஜிட்டல் வர்த்தக சேவைகளில் அதிக கவனம் செலுத்தும் விதமாக இந்தக் கூட்டுறவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பரஸ்பர நிதி வர்த்தகமும், டிஜிட்டல் வர்த்தகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அமின் சித்திக் தெரிவித்தார்.

Spread the love