May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டியாகோ விக்ட்ரி எல்லோ விற்பனை நிறுத்தம்: டாடா

மும்பை, மே 3

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் வண்ணங்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது.

டியாகோ விக்ட்ரி எல்லோ நிற வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது டியாகோ ஹேட்ச்பேக் மாடல் பிளே ம் ரெட், பியூர் சில்வர், அரிசோனா புளூ, பியல்சென்ட் வைட் மற்றும் டேடோனா கிரே என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் என டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக மார்ச் 2021 மாதத்தில் அரிசோனா புளூ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், விற்பனை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து டியாகோ விக்ட்ரி எல்லோ நிற வேரியண்ட் டாடா வலைதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. தற்போது டியாகோ ஹேட்ச்பேக் மாடல் எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் ட்ரிம்களில் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த கார் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் ஆப்சனில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிசன் போன்ற ஆப்­ன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 85 பியஹச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Spread the love