மும்பை, மே 7
தனது டியோ 110சிசி ஸ்கூட்டருக்கு சிறப்பு தள்ளுபடி சலுகையை ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சிறப்பு சலுகையின்படி டியோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ரூ.3500 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணை முறை சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மே 1 துவங்கி ஜூன் 30 வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹோண்டா டியோ ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ.63,273 என்றும் டீலக்ஸ் மாடல் விலை ரூ.66,671 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டியோ ஸ்டான்டர்டு மாடல் மூன்று வித வண்ணங்களில் கிடைக்கிறது. இத்துடன் ஹாலோஜன் யஹட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிளாக் கலர் வீல்கள் உள்ளது. டீலக்ஸ் மாடலில் எல்இடி யஹட்லைட், புல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்டெலிஜண்ட் டிஸ்ப்ளே, தங்க நிற அலாய் வீல்கள் உள்ளன. மேலும், இரு மாடல்களிலும் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர், பேண் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.65 பியஹச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.